சொக்சோ சமூகநல பாதுகாப்பு திட்டத்தில் பினாங்கு கிராமத் தலைவர்கள் அங்கத்துவம் பெற்றனர்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பிறை, ஏப்ரல் 15-
சொந்த தொழில் அல்லது சொந்த வியாபாரம் செய்பவர்கள் அல்லது சமூக தலைவர்களுக்கு உதவும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம்
Socso skim keselamatan Pekerja sendiri திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து பயன் அடைந்து வரும் வேளையில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர்களும் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது..

இந்த சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ள நன்மைகள் குறித்து Puan Usha Davei kanagobal (Pegawai Tadbir Perkeso ) கிராமத் தலைவர்களுக்கு முழு விளக்கம் அளித்தார்.

இந்த திட்டத்தில் 90 விழுக்காடு கட்டணத்தை அரசு ஏற்று கொள்ளும் வேளையில் ஒருவர் 23 வெள்ளி 30 காசை செலுத்த வேண்டும் என்றார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமத் தலைவர்களும் இந்த திட்டத்தில் பயன பெறும் வகையில் முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

விபத்துக்கள், குறைபாடுகள் மற்றும் நோய்கள் போன்ற எதிர் பாராத நிகழ்வுகளுக்கு இந்த திட்டம் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவுகள் மறுவாழ்வு செலவுகள் மற்றும் வருமான இழப்பை ஈடு கட்டவும் இந்த திட்டம் உதவி வழங்குகிறது.

இந்தத் திட்டத்தில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ அவர்கள் சொக்சோ சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles