
காஜாங் ஏப்ரல் 15-
காஜாங்கில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயக கோவிலில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காஜாங் கவுன்சிலர் பாலமுரளி, உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன், பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஏற்பாட்டுக் குழு தலைவர் சகோதரர் தேவேந்திரன் சிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60 பெண்களுக்கு சேலைகளும், 60 ஆண்களுக்கு வேட்டியும் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 150 பேர் கலந்து கொண்டனர்.

