கோல குபு பாரு இடைத் தேர்தல்- அவதூறுகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்!

உலு சிலாங்கூர், ஏப் 15- இடைத் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர்
பரப்பும் அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் நம்ப வேண்டாம்
என்று கோல குபு பாரு தொகுதி மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தங்களின் நோக்கத்தை அடைவதற்காக
எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும்
பரப்பி வருவர் என அவர் சொன்னார்.

நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கோரவும் தவற்றை ஒப்புக் கொள்ளவும்
தயாராக இருக்கிறேன். ஆனால், அவதூறு பரப்ப மாட்டேன் என்று அவர்
குறிப்பிட்டார்.

அவதூறுகளாலும் பொய்களாலும் இன விவகாரங்களாலும் நாட்டை
ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்று பத்தாங் காலி பாலாய்
ராயாவில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்
உரையாற்றிய போது அவர் சொன்னார்.

Selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles