
காளிதாஸ் சுப்ரமணிம்
மா. பவளச்செல்வன்
ராசா, ஏப்ரல் 15-
இந்தியர்கள் அதிகம் வாழும் பத்துகேவ்ஸ் சட்டமன்ற தொகுதியில் நான் பலமுறை வெற்றி பெற்று வருகிறேன்.
இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒவ்வொரு ஆண்டும் பத்துமலையில் நடைபெறும் தைப்பூசத்தில் கலந்து கொள்கிறேன்.
பத்துகேவ்ஸ் உட்பட சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கி வருகிறோம்.
2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை தமிழ் பள்ளிகளுக்கு மிகப்பெரிய மானியத்தை வழங்கி சாதனை படைத்திருக்கிறோம்.
கோயில்கள் , அரசு சார்பு இயக்கங்கள் , இந்திய இளம் தொழில் முனைவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டி உள்ளோம்.
சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களை ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
இனிவரும் காலங்களிலும் தமிழ் பள்ளிகள், கோயில்களுக்கு தொடர்ந்த மானியங்கள் வழங்கப்படும் என்று கோலகுபு பாரு ராசாவில் நேற்று சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கெஅடிலான் மகளிர் அணி உதவித் தலைவர் சங்கீத ஜெயகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

