மித்ரா வழி இன்னும் அதிகமான திரைப்படக் கலைஞர்களை உருவாக்க முடியும்போஸ் பிக்சர்ஸ் RMS சாரா நம்பிக்கை

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர், ஏப்.15-
இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசாங்கம் இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா வழி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மித்ரா வழங்கிய ஒரு வாய்ப்பில் 20 இளைஞர்கள் திரைப்பட துறையில் பயிற்சி பெற்றுள்ளதாக Boss Pictures Sdn Bhd நிறுவனத்தின் தலைவர் RMS சரவணன் தெரிவித்தார்.

மித்ராவின் ஆதரவில் அண்மையில் 20 இளைஞர்களுக்கு திரைப்பட தயாரிப்பு, இயக்கம், படத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இந்த பயிற்சி பட்டறையில் ஆண், பெண் என்று இருபாலரும் பங்கேற்றனர். இவர்களுக்கு திரைப்பட துறையில் அனுபவமிக்பவர்கள் பயிற்சி வழங்கியதாக ஆர்.எம்.எஸ் சாரா சொன்னார்.

இந்த பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். திரைப்பட துறை சம்பந்தப்பட்ட படிப்பை பல இளைஞர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறையை உருவாக்க இவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மித்ரா போன்ற நிதியுதவி மேலும் பல இளைஞர்கள் திரைப்பட துறையில் ஈடுபட பாலமாக அமையும் என்று 20 இளைஞர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் RMS Sara செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற 20 பேரும் நல்ல திறமைசாலிகள். இவர்களுக்கு ஏற்கெனவே இத்துறையில் ஆர்வம் இருந்ததாலும் படித்ததாலும் இவர்கள் எளிதில் கற்றுக் கொண்டனர். இவர்கள் ஓரளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டதாக RMS Sara தெரிவித்தார்.

மித்ராவின் ஆதரவில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பங்கேற்ற 20 பேருக்கு அண்மையில் அம்பாங்கில் உள்ள பினாஸ்சில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மித்ரா சிறப்புக்குழுத் தலைவர், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் YB பி.பிரபாகரன் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் 20 பங்கேற்பாளர்களுடன் பினாஸ் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ Azmir, மித்ரா அதிகாரிகள், போஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles