
ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது.
ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில், இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
reuters

