
ஷா ஆலம், ஏப் 16: தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற முதியோர்களுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வழங்குகிறது..
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, மாற்றுத்திறனாளிக்கான அட்டை வைத்திருப்பவர்களுக்கு (OKU) இதே சேவை வழங்கப்படுகிறது என்று ஷா ஆலம் மாநகராட்சி முகநூலில் தெரிவித்துள்ளது.
ஷா ஆலம் மருத்துவமனை. செக்ஷன் 7 சுகாதாரக் கிளினிக்,
செக்ஷன் 19 சுகாதாரக் கிளினிக், புக்கிட் கூடா சுகாதார கிளினிக்,
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, சுங்கை பூலோ பொது மருத்துவமனை சுங்கை பூலோ சுகாதார கிளினிக் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மருத்துவமனைகள் ஆகும்.
மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டுத் துறையை 03-5522 2732 அல்லது 03-55105133 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சேவைக்கான முன் பதிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
selangor kini

