வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது ஜனநாயக படுகொலை!சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆவேசம்

மா. பவளச்செல்வன்
காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 18-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது ஜனநாயக படுகொலை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.

வாக்களிப்பது உங்கள் கடமை. அது நமது உரிமையும் கூட.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் அல்லது பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் இந்திய சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை.

ஆகவே இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும் படி சிலர் சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி கருத்துரைத்த சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ராயுடு, பொதுமக்களை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது சட்டப்படி குற்றம்.

வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றுவது ஜனநாயக கடமையாகும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் தங்களது கடமை நிறைவேற்ற கண்டிப்பாக வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கோலகுபு பாரு பத்தாங் காலி லீகா மாஸ் பண்டார் உத்தாமா சிலம்ப கிளப் தலைவர் முரளி முனுசாமி மற்றும் கவுன்சிலர் ராஜேஷ் ஏற்பாட்டில் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற போது
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles