கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்பாஸ் கட்சி போட்டியிடுகிறதா? பிஎஸ்எம் கட்சியும் களத்தில் இறங்குமா?

மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 18-
அனல் பறக்கப் போகும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சி போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்
YB Tuan Haji Mohd Hasnizan Bin Harun போட்டியிடலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

பெரிக்கத்தான் நேஷனல் இம்முறை பலம் வாய்ந்த வேட்பாளரை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பிஎஸ்எம் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரலாம்.

பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் காலடி எடுத்து வைக்கும் போது இதற்கு பதில் தெரியலாம்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று சட்டமன்றங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை பெரிக்கத்தான் நேஷனல் வென்ற வேளையில் கோலகுபு பாருவை மட்டுமே பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்றியது.

இம்முறை இடைத்தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் பி.எஸ்.எம் களத்தில் இறங்கலாம் என்று கூறப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles