
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 18-
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். ராயர் இன்று கோலகுபு பாருவில் பிரசித்திப்பெற்ற ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூஜையில் கலந்து கொண்டார்.
57 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த ஆலயத்தில் அன்மையில் கோலாகலமாக கும்பாபிஷேகம் கண்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேக புஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று 19வது நாள் மண்டலாபிஷேக பூஜையில் ராயர் கலந்து கொண்டது ஆலய நிர்வாகத்தினர் பெரிதும் வரவேற்றனர்.
சிறப்பு பூஜையின் போது தேவாரம் பாட வாய்ப்பு வழங்கப்பட்ட போது ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து தேவாரம் பாடி பூஜையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சித்தி விநாயகரின் அருளை பெற்றது தமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்ததாக அவர் சொன்னார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், டத்தோ பி.எஸ். சாமி, கவுன்சிலர்கள் புவனேஸ்வரன் பச்சைமுத்து, முருகன், ராஜேஸ் ராவ், ஶ்ரீகாந்த், எலின் உட்பட ஏராளமானோர் பூஜையில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

