முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட்டுறவுத் துறையை உயர் மட்டத்திற்கு உயர்த்த முடியும்!டத்தோ இரமணன் நம்பிக்கை

காளிதாஸ் சுப்ரமணியம்

பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 18-
கூட்டுறவுத் துறையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல அதிக வல்லுநர்கள், குறிப்பாக முனைவர் பட்டம் பெற்றவர்கள் தேவை என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.

கூட்டுறவு என்பது ஒரு சிறிய துறை அல்ல, நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவுகள் 7 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

“எனவே, இந்த கூட்டுறவு மக்களுக்கு, குறிப்பாக வேலை செய்பவர்களுக்கும், சொந்தமாக தொழில் நடத்துபவர்களுக்கும் முக்கியமானது.

“இதனால் வரவிருக்கும் பிஎச்டி பட்டதாரிகள் மலேசியாவில் கூட்டுறவுகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என்று டத்தோ இரமணன் சுட்டிக் காட்டினார்.

மலேசிய கூட்டுறவு நிறுவனத்தின் (ஐ.கே.எம்.ஏ) ஐடில்பித்ரி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு போது அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles