
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 18-
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கிரிஷ் இன்னிசை விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோலாலம்பூரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இதன் டிக்கெட்டுகளை இன்று சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற டிக்கெட் வெளியீட்டு நிகழ்ச்சியில் ம.இ.கா. தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ஹரே கிருஷ்ணா உரிமையாளர் ஹரேகிருஷ்ணா ஏற்பாட்டில் நடைபெறும் இந்த இன்னிசை விழா முத்திரை பதிக்கும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.
பாடகர் கிரிஷ் ஒரு தலைசிறந்த முன்னணி பாடகர் ஆவார். இந்த கலை விழா வெற்றி பெற மனதார வாழ்த்துவதாக அவர் சொன்னார்.
மலேசியக் கலைஞர் டார்க்கி எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர் என்று பின்னனி பாடகர் கிரீஷ் சொன்னார். என் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஹரே கிருஷ்ணா உரிமையாளர் ஹரேகிருஷ்ணா பத்துமலை மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக இது அமையும் என்று பாடகர் கிரிஷ் குறிப்பிட்டார். இசை விழாவில் தங்களோடு சேர்ந்து மலேசியாவைச் சேர்ந்த இரு பாடகர்களும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல பணிகளுகுக்கு மத்தியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோஶ்ரீ சரவணன், விழாவின் ஏற்பாட்டளரான ஹரே கிருஷ்ணா, டி பி. கானா மற்றும் விஷால் ஆகியோருக்கும் கிரீஷ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

