

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
பத்தாங் காலி, ஏப்ரல் 18-
கோலகுபு பாரு
பத்தாங் காலி லீகா மாஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்து குடும்பங்களுக்கு உணவு கூடைகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
உலு சிலாங்கூர் கவுன்சிலர் ராஜேஸ்ராவ் மற்றும் பத்தாங் காலி சிலம்ப கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைபாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்து ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு முழு விளக்கம் அளித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களது குறைகளையும் முன் வைத்ததோடு பிரச்சினைகளுக்கான தீர்வு முறைகளும் ஆலோசனைகளும் பாப்பாராயுடுவும் சத்திய பிரகாஷும் வழங்கினர்.
மேலும் வரும் 22 ஆம் தேதி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பத்தாங்காலியில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று ராயுடு தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் புவனேஸ்வரன் பச்சைமுத்து, முருகன், ஶ்ரீகாந்த், எலின், ஆகிய அனைவருடன் சிலாங்கூர் மாநில ஐசீட் அதிகாரி மாதவன் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

