கர்ப்பால் சிங் நினைவாக கல்வி உபகரச் சம்பளம்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 18-
ஜசெகவின் மாபெரும் தலைவர் கர்ப்பால் சிங்கின் நினைவாக கல்வி உபகார சம்பள திட்டத்தை ஜசெக அதிகாரப்பூர்வமான அறிமுகம் செய்துள்ளது.

இதனை அக்கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் நேற்று அறிவித்தார்.

மறைந்த கட்சித் தலைவர் கர்பால் சிங்கின் நினைவாக, ஜசெக கர்பால் சிங் கல்வி உபகார சம்பள திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சட்ட உயர் கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது.

இந்த கல்வி உபகாரச் சம்பள திட்டம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜெலுத்தோங் புலி கர்பால் என பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த நிதியைத் தொடங்க 100,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பாலின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles