
புத்ராஜெயா, ஏப் 18- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான ஐடில்பித்ரி மடாணி 2024 கொண்டாட்டம் இன்று ஜோகூரில் தொடங்கி ஏழு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு ஏப்ரல் 20 ஆம் தேதி சபாவிலும், அதைத் தொடர்ந்து மலாக்கா (ஏப்ரல் 22), கிளந்தான் (மே 2), கெடா (மே 4), பினாங்கு (மே 5) மற்றும் திரங்கானு (மே 9) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் என நிகழ்வு செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில அரசு தொகுப்பாளராகவும், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் என்றும் அது கூறியது.
Bernama

