
செ வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 18-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற கேள்விக்கு அவர் கருத்துரைக்க மறுத்துவிட்டார் .
வேட்பாளர் பட்டியல் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த மூன்று தவணைகளாக கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் வெற்றி பெற்று வந்தார்.
அண்மையில் அவர் காலமானார். இதனைத் தொடர்ந்து இப்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

