
காளிதாஸ் சுப்ரமணிம்
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அறிவித்தார்.
மூத்த உறுப்பினர்களுக்கு உதவிநிதி வழங்கப்பட வேண்டும் ஏற்பாட்டுக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அந்த திட்டத்தை முன்னெடுக்குமாறு அதற்கு முதல் கட்டமாக வெ.50 ஆயிரத்தை வழங்குவதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் முன்னாள் மூத்த 14 சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
நாட்டில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் முக்கிய பங்காற்றிய மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.
அன்றைய காலக்கட்டத்தில் நம் சமுயாத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம், மஇகா, மலேசிய திராவிடர் கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியவை.
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இணைந்து சேவையாற்றிய மூத்த சேவையாளர்கள் கௌரவிக்கப்படுவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
நேற்று மஇகா நேதாஜி மண்டத்தில் கூட்டரசுப் பிரதேச முன்னாள் மலேசிய இளைஞர் மணிமன்ற பேரவையின் ஏற்பாட்டில் மன்றத்தின் மூத்த சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

