பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏப்ரல் 23 இல் ஸ்ரீ அகத்தியர் குரு பூசை விழா

நிகழும் சித்திரை மாதம் 10ஆம் நாள் ஆங்கிலம் 23.4.2024 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மணி 7.30 க்கு மேல் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மகரிஷி அகத்தியரின் நல்லாசியுடன் 17ஆம் ஆண்டு சித்தர் குரு பூசை மிக விமரிசையாக நடைபெறுகிறது என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் எஸ். பக்தவச்சலம் தெரிவித்தார்.

இந்த குரு பூசையானது சித்தர்களின் ஆணைப்படி யாகம் வளர்க்கப்பட்டு,சித்தர் நெறியினர் பால் குடம் எடுத்து ,அகவல் ஓதி,சித்தர்களின் நாமம் பாடியும் சிவபுராணம் ஓதப்பட்டு அகத்தியருக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டு அன்னதானத்துடன் இந்த சித்தர் பூசை நிறைவுகானும் என்று அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் சித்தர் நெறியாளர்கள் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொண்டு சித்தர்களின் பரிபூரண நல்லாசிகளை பெற்று நன்மை பெற வேண்டும் என்று பக்தவத்சலம் கேட்டுக்கொள்கிறார்.

தொடர்புக்கு
012-6290305
S. பக்தவத்சலம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles