
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடததால் மசீச தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று மசீச அறிவித்துள்ளது.
வரும் மே 11 ஆம் தேதி நடைபெறும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்க மாட்டோம் என்று இதற்கு முன்னர் ம இகா அறிவித்தது.
இப்போது ம இகாவை பின் பற்றி மசீசவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மலேசிய கினி

