
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
வரும் மே மாதம் 11 ஆம் தேதி கோலா குபு பாருவில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு முன்னதாக உலு சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு 52 லட்சத்து 10,000 வெள்ளி மானியம் ஒதுக்கீட்டை அறிவித்ததற்காக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙாகோர் மிங்கிற்கு பெர்சே இன்று கண்டனம் தெரிவித்தது
இந்த நாட்டில் தேர்தல் முறை மற்றும் ஜனநாயக செயல்முறைகள் மீது குறிப்பாக வாக்காளர்கள் மத்தியில் மக்களின் நம்பிக்கையை இது சிதைக்கும் என்று பெர்சே கண்டித்துள்ளது.
சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஸ்மின் அலி இது தொடர்பாக கூறுகையில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக வாக்குகளைப் பெறுவதற்காக டிஏபி கறைபடிந்த பண அரசியலைச் செய்வதாகக் குற்றம் சாட்டினர்.
மலேசிய கினி

