
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்.
மாறாக பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இந்திய வாக்காளர்களை உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டார்.
தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்.
ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வாக்களியுங்கள்.
ஆனால் ஜசெகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள் என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரான அவர் சொன்னார்.

