
ஷா ஆலம், ஏப் 20– குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 5,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
சிலாங்கூரில் பிறந்த அல்லது இம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த கல்வி நிதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் தற்போது பயின்று கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்.
மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யத் தகுதியுடையவர்களாவர்.
இந்த கல்வி கட்டண நிதிக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் இம்மாதம் 30 ஆம் தேதியாகும்.
Selangor kini

