கோல குபு பாரு இடைதேர்தலில் இந்தியர்கள் யார் பக்கம்?

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் ஏப்ரல் 20-
கடந்த 15ஆவது பொது தேர்தலி்ன் போது 85 சதவீத இந்தியர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற பிரதம‌ர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் அரசாங்கம் வரும் மே 11ஆம் தேதி நடைபெறும் கோல குபு பாரு இடைதேர்தலில் மீண்டும் அந்த ஆதரவை பெற பெறுமா ?என்ற கேள்வி இப்போது பலமாக எழுந்துள்ளது.

இந்தியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என மேடைகளில் முழக்கமிட்ட தலைவர்களின் மௌனம் இப்போது இந்தியர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி எப்படி இந்திய சமுதாயத்திடம் நம் தலைவர்கள் நெருங்க போகிறார்கள் என்ற அச்சம் கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர் சந்திரசேகரன் ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்நிலையில்
மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் இந்தியர்கள் யார் பக்கம் என்பது தெள்ளத தெளிவாக தெரிந்து விடும் என்றார் அவர்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இப்போது மலேசியர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles