
காளிதாஸ் சுப்பிரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 20-
டத்தோ இரமணன் மித்ரா தலைவராக இருந்த போது தமிழ்ப் பள்ளிமில் பயிலும் பள்ளி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயர்கல்வி கூடங்களில் பயிலும் பி 40 இந்திய மாணவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது .
இந்த மூன்று திட்டங்களும் இவ்வாண்டு தொடரும் என்று மித்ரா தலைவர் பிரபாகரனுடன் தெரிவித்தார் .
இந்த மூன்று திட்டங்களும் பயனுள்ள திட்டங்கள் என்பதால் அது தொடரும் என்று அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளியில் பயிலும் பாலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கும் தொடர வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறுநீரக நோயாளிகள் சுத்திகரிப்பு மேற்கொள்ள அவர்களுக்கும் நிதி தேவைப்படுகிறது.
அதேபோல் உயர் கல்வி கூடங்களில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் சுமையை குறைக்க கண்டிப்பாக மித்ரா நிதி வழங்கப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார் .

