கெஅடிலான் கட்சி 25 ஆண்டு விழா கொண்டாட்டம்! உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்தது..

மா. பவளச்செல்வன்

ஷா ஆலம் ஏப்ரல் 21-
கெஅடிலான் கட்சியின் 25 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா
இன்று ஷா ஆலம் ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி) மண்டபத்தில் மிகவும் விமர்சையாக தொடங்கியது.

இவ்வாண்டு மார்ச் மாதம் வரை கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 53,212 ஆக உயர்ந்துள்ளது என்று கெஅடிலான் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வாரி இப்ராஹீம் கொள்கை உரையாற்றினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாநாட்டு மண்டபத்துக்கு வருகை புரிந்த போது உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மற்றும் உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து உட்பட ஏராளமானோர் வரவேற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles