
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசு சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து மைபிபிபி கட்சி களம் இறங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது
மைபிபிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டத்தோ இண்ட்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன், சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த தேர்தலில் நேரடியாக களம் இறங்கி உள்ளார்.
மைபிபிபி கட்சியின் தலைவர்கள் மற்றும் உலு சிலாங்கூர் மைபிபிபி உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

