
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு இந்திய வாக்காளர்கள் பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து போக வேண்டாம்.
துணிந்து வாக்களிக்க வாருங்கள். பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை வெற்றி பெற செய்யுங்கள் என்று ஒற்றுமை அரசாங்க தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுவார்.
சிலாங்கூர் மாநில அரசும் இந்தியர்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கி உள்ளது.
ஆகவே இந்திய வாக்காளர்கள் பொய் பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்காமல் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக அம்னோ, ம இகா, ஐபிஎப்,மைபிபிபி கட்சிகள் இணைந்து தேர்தல் பணியாற்றும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

