
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கெர்லிங், மே 3-
நாட்டில்
104 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா கேட்டுக் கொண்டுள்ளார்.
கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பள்ளியின் தலைமையாசிரியர் கலைவாணர் தலைமையிலான ஆசிரியர் குழு பள்ளி நடவடிக்கைகள் குறித்து டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸாவுக்கு உரிய விளக்கம் அளித்தார்.
இந்த பள்ளி 104 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறிவிக்கப்பட்டது .
இதுபோன்ற தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் இப்பள்ளியின் எதிர்காலம் குறித்து முறையாக சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதில் பள்ளி மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக், துணை அமைச்சர் டத்தோ இரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

