
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 3-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை
புறக்கணித்தால் வெற்றி பெற்றவரும் நம்மை மதிக்க மாட்டார். தோல்வி கண்டவரும் நம்மை மதிக்க மாட்டார் என்று ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.
இறுதியில் இங்குள்ள இந்திய சமூகம் தான் இன்னல்களை எதிர்நோக்குவார்கள்.
அரசாங்கத்தின் மீது பலருக்கு அதிருப்திகள் இருக்கும். அதை யாராலும் மறுக்க முடியாது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதற்கு மஇகாவும் ஒரு காரணம். ஆனால் மஇகாவுக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை.
எங்களுக்கும் அதிருப்தி உள்ளது. ஆனால் சமுதாயத்தின் நலன் கருதி ஒற்றுமை அரசுக்கு மஇகா ஆதரவு தந்து வருகிறது.
எனவே அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் சரியான இடமில்லை என்று இங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

