
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 3-
நாட்டில் வாழை இலை உணவகங்கள் தழைக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு உதவ வேண்டும் என்று கோப் பிரிமாஸ் கூட்டுறவு கழகத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி கேட்டுக் கொண்டார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராக இருக்கும் டத்தோ இரமணன் எங்களுக்கு பெரிய அளவில் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் கோப் பிரிமாஸ் கூட்டுறவு கழகத்தின் 11 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று புக்கிட் கியாரா சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்றது.
நாட்டில் வாழை இலை உணவகங்கள் தழைக்க
வாழை மரங்கள் அதிக அளவில் நடப்பட வேண்டும்.
வாழை இலை உணவகங்களுக்கு தினசரி அதிக அளவில் வாழை இலைகள் தேவைப்படுகிறது. வாழை இலைகள் கிடைப்பது அரிதாக உள்ளது.
ஆகவே வாழை இலை தோட்டங்கள் உருவாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு உதவ வேண்டும் என்று kpoarasi pengusaha restoran India chairman j. Govindasamy கேட்டுக் கொண்டார்.
வாழை மரங்களோடு கறி வேப்பிலை மற்றும் முருங்கைக்காய் மரங்களை நடுவதற்கும் அரசு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

