உலகப் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் புதிய ரக மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது!

செ.வே.முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர், மே 3-
உலக புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் விற்பனை தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் நேற்று புதிய ரக மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது.

இதன் அறிமுக விழா நேற்று பங்சாரிலுள்ள ஹார்லி-டேவிட்சன் தலைமையகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.ரோட் கிளைட், ஸ்ட்ரீட் கிளைட் என இருவகை புதிய பைக்குகளை ஹார்லி-டேவிட்சன் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்ட்ரீட் கிளைட் வகை பைக்கின் ஆரம்ப விலை 190,900 வெள்ளியாகும். மேலும், ரோட் கிளைட் வகை பைக் 206,900 விலையில் கிடைக்கின்றது.இவ்விரு புதிய பைக்குகளும் Milwaukee Eight 117 டிஸ்ப்ளேஸ்மென்ட் 1,923cc V-Twin இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இரண்டு மாடல்களும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உகந்த ஏரோடைனமிக் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஹார்லி-டேவிட்சன் CVO Road Glide ST 25-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles