கோலகுபு பாருவில் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியது மைபிபிபி

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு, மே 3-
கோககுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து மைபிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

கோலகுபு பாரு ராசாவில் உள்ள மைபிபிபி சேவை மையத்தின் மூலம் பிரச்சாரம் தொடங்கப்பட்டு இருப்பதாக சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

மேபைள் சேவை மூலம் வாக்காளர்களை திறப்பு கண்டு வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் ஜெகதீசன் தலைமையில் 12 கிளை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர் என்று அவர் சொன்னார்.

மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் கட்சியின் உத்தரவுக்கு இணங்க நாங்கள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருக்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles