
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு, மே 4-
அனல் பறக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 இந்தியர்களில் நான்கு பேர் வாக்களித்தால் கூட பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெறுவது உறுதி என்று டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாரா தெரிவித்தார்.
இப்போது அனைவரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள இடைத்தேர்தலாக கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் விளங்குகிறது
18 விழுக்காடு இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் 10 இந்தியர்களில் நான்கு பேர் வாக்களித்தால் கூட பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெறுவது உறுதி என்று சிகாமாட் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாரா தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருலை ஆதரித்து அவர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.
இதனிடையே இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை வரும் பத்தாண்டுகளில் தீர்க்க முடியும் என்று அவர் சொன்னார்.
மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனை மூலம் கிடைக்கும் வரியிலிதுந்து 10% தொகையை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கினாலே போதும் அதன் மூலம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவ முடியும் என்று அவர் சொன்னார்.