
செ வே. முத்தமிழ் மன்னன்
ஜோர்ஜ்டவுன், மே 6-
மைபிபிபி சில போராட்டங்களை எதிர்நோக்கிய போது கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களின் மறுபிரவேசம் கட்சியின் குரல் ஒங்குவதற்கு வகை செய்யும் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோக பாலமோகன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“மைபிபிபி ஒரு பல்லின கட்சியாக இருப்பதால் நாங்கள் அரசாங்கம் அல்லது எந்த கூட்டணிக்கும் ஆதரவு கொடுப்போம்,
காரணம் நாங்கள் பல இனங்களையும் இணைக்கக்கூடிய பல்லின கட்சியினர்” என்பதைச் சுட்டிக் காட்டினார்
“ மைபிபிபி இதுவரை தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது. எனினும், இன்று வரை இக்கூட்டணி எங்களுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது சங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் கூடிய விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்”. என்றார்.
அந்த வகையில் யாரெல்லாம் ஒற்றுமையைக் கடைபிடிகிறார்களோ அவர்களுக்கு இக்கட்சியில் இடமுண்டு என்று பினாங்கு மாநில மைபிபிபியின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது லோக பாலா இதனைக் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில மைபிபிபியின் ஆண்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 500 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கட்சியின் பினாங்கு மாநில தலைவருமான டத்தோ லோக பாலா தெரிவித்தார்.