
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 5-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கும் வேளையில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் மலாக்கா காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
கோலகுபு பாருவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக சென்று அவர்கள் ஹராப்பானுக்கு வாக்குகள் திரட்டினர்.
கோலகுபு பாரு இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குணசேகரன் தெரிவித்தார்.
வாக்களிக்க வர வேண்டாம் மற்றும் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிலர் கூறினாலும் அதை இங்குள்ள மக்கள் பொறுப்பெடுத்தவில்லை.
சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு அதிக அளவில் உதவி செய்துள்ளதை இவர்கள் நினைத்து பார்க்கிறார்கள்.
அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

