
காளிதாஸ் சுப்ரமணியம்
கோல குபு பாரு , மே 5-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பொது மருத்துவமனை கட்டுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
நாட்டில் 15ஆவது பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது இங்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆனால் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டேன்.
இதனால் மருத்துவமனை கட்டும் விவகாரத்தை மறந்து விட்டவில்லை.
மலாக்கா மாநிலத்தை விட இந்த உலு சிலாங்கூர் தொகுதி மிகப்பெரியது.
இங்கு வசிக்கும் மக்களின் நன்மைக்காக அனைத்து வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவது மிக அவசியம் என்று அவர் சொன்னார்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பெர்சத்து வேட்பாளர் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்..

