
எட்டாவா(உத்தரப்பிரதேசம்): தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, உங்களிடம் ஆசி பெறுவதற்காக இன்று இங்கு வந்துள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் எனது கடின உழைப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.
மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்கான அடித்தளத்தை நான் தயார் செய்து வருகிறேன்.
2047ல் உங்கள் சொந்த மகனோ, மகளோ பிரதமராகவும், முதல்வராகவும் வருவார் என்பது யாருக்குத் தெரியும். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த நாட்டின் பிரதமராக வருவார்கள் என்ற கட்டுக்கதையை இந்த டீ விற்பனையாளன் உடைத்துவிட்டான்” என்று தெரிவித்தார்.
The hindu times

