
பட்டர்வெர்த், மே 6- எரிபொருள் உதவித் தொகை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தி நெறியற்றது எனக் குற்றஞ்சாட்டிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இவ்விவகாரம் குறித்து அமைச்சரவை நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
நமது உறுதியான நிலைப்பாடு காரணமாக அண்டை நாடு மற்றும் அனைத்துலக ஊடகங்கள் எதிர்மறையான செய்திகள் மூலம் நம்மை தாக்கி வருகின்றன.
உதாரணத்திற்கு ஜோகூரில் கெஸினோ சூதாட்ட மைய விவகாரத்தைக் கூறலாம். அது குறித்து விவாதிக்கப்படாத நிலையில் பரபரப்பான செய்தியாக ஆக்கப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.
bernama

