
கோலாலம்பூர், மே 6– கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தை குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயன்பாட்டை மேம்படுத்த உள்துறை அமைச்சு விரும்புகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நாட்டின் எல்லை பாதுகாப்பு தற்போது மலேசிய எல்லை சோதனைச் சாவடி மற்றும் எல்லை முகமையின் (எம்.சி.பி.ஏ.) கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால் அதன் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் மேம்படுத்த அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
bernama

