
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 7-
கனத்த காற்றுடன் பெய்த அடைமழையால் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள மோனா தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் அந்த தண்டவாளம் முற்றாக சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் 17 கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.மரம் விழுந்து கார் நொறுங்கியதால் அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
படுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீயணைப்பு படையினர் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

