
பாத்தாங் காலி. மே.8- நாட்டில் சிறந்த மாநிலம் சிலாங்கூர். சிறந்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. ஆளுங் கட்சியின் சார்பில் போட்டியிடும் நமது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஜ.செ.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞரும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
கோலக் குபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாத்தாங் காலி, புக்கிட் சண்டான் புதுக் கிராமத்தில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் ஹராப்பான் வேட்பாளர் புவான் பாங், லிம் குவான் எங், ஙா கோர் மிங், ஸ்டிவன் சிம், தான் கொக் வாய், பாப்பா ராய்டு மற்றும் ஜ.செ.க.வின் பல தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்திய வாக்காளர்களும் அடங்குவர்.
Selangor kini