கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை: கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார். சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாளகம் முன்பு பெண்கள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்தனர். சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The hindu times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles