பிரதமர் துறையின் ஐடில்பித்ரியின் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் கலந்து கொண்டார்

புத்ராஜெயா, மே8 9 – பிரதமர் துறையின் (ஜேபிஎம்) மடாணி ஐடில்பித்ரியின் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
அவரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோர் வரவேற்றனர்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலியும் அவரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாமன்னர் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles