
ஷா ஆலம், மே 9 ஷா ஆலமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேசியக் காற்பந்து வீரர் ஃபைசல் ஹலிம், இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, சீரான நிலையில் உள்ளார்.
“சிறிது நேரத்திற்கு முன்பு நான் சிலாங்கூர் எஃப்சியை தொடர்பு கொண்டேன், ஃபைசல் பாதுகாப்பாக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அவர் சீரான நிலையில் இருப்பதாகவும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
அவர் நேற்று பிரதமரின் அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஃபைசல் ஹலிமை சந்தித்தார்.
ஃபைசல் விரைவில் குணமடைய அனைத்து தரப்பினரின் பிரார்த்தனை தேவை என கோத்தா அங்கெரிக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தெரிவித்தார்.
Bernama

