இந்தியர்களின் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது – டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலகுபு பாரு மே 9-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவுக்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா தெரிவித்தார்.

நான் கெர்லிங் தமிழ்ப்பள்ளிக்கு சென்றேன்.அங்கு இந்திய வாக்காளர்களை சந்தித்தேன்.

பின்னர் கோலகுபு நகரை வலம் வந்தேன். இந்தியர்களை சந்தித்தபோதேல்லாம் அவர்கள் வழங்கிய ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கிறது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்று இந்திய வாக்காளர்களை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles