ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற மாற்றுத் திறனாளி, மாணவர்கள் காலையிலே வாக்குச் சாவடிகளில் திரண்டனர்

காளிதாஸ் சுப்ரமணியம்

உலு சிலாங்கூர், மே 11-
தங்கள் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 39,362 வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 18 வாக்களிப்பு மையங்களில் உள்ள 74 வாக்குச் சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன.

தங்கள் ஜனநாயக க் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்று காலை 7.15 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச் சாவடி முன் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களும் தேர்தல் பணியாளர்களும் உதவி புரிந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles