கோல குபு பாரு இடைத்தேர்தல்: அஞ்சல் வாக்குகளில் பக்கத்தான் முன்னிலை!

காளிதாஸ் சுப்ரமணியம்

மாலை 5.50

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் அஞ்சல் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது.

பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவுக்கு 592 வாக்குகள் கிடைத்தன.

பெரிக்கத்தானுக்கு 156 வாக்குகள் கிடைத்தன.
மற்ற இரு வேட்பாளர் கள் தலா ஒரு வாக்கு பெற்றனர்.

அஞ்சல் வாக்குகளில் 436 வாக்குகள் பெற்று பக்கத்தான் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

மாலை மணி 5.20

கோல குபு பாரு இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்னும் சில நிமிடங்களில் முடிவுறும் வேளையில் இராணுவ வாக்குகளின் முடிவு வெளியாகி உள்ளது.

238 வாக்காளர்களில் 155 பேர் வாக்களித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் 84 வாக்குகள் பெற்றுள்ளது. பெரிக்கத்தான் நெஷனல் 71 வாக்குகள் பெற்றுள்ளது.

பக்கத்தான் ஹராப்பான் 13 வாக்குகள் அதிகம் பெற்று முன்னனியில் உள்ளது.

மாலை மணி 4.40

மாலை 4 மணி வரையிலும் 55.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தகவல்.

மாலை மணி 4.20

கோல குபு பாருவின் 16 வாக்குப்பதிவு மையத்தில் நைகல் கார்டெனர் வாக்குப்பதிவு மையத்தில் 3 மணி வரையிலும் 36.70% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. கடந்த மாநில தேர்தலைக் காட்டிலும் குறைவான வாக்குப்பதிவுகளே பதிவாகியிருக்கிறது. மாநில தேர்தலில் 56.40% வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் மணி 3.30

3 மணி வரையிலும் 50.87 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணைய தகவல்.

பிற்பகல் மணி 3.00

கோல குபு பாரு இடைத்தேர்தலில் 2 மணி வரையிலும் 16 வாக்குச்சாவடியில் 44.68% வாக்குப்பதிவு பெற்ற வேளையில் பெர்தாக் வாக்குச் சாவடியில் 74.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பெர்தாக் வாக்குச் சாவடியின் கீழ் 418 வாக்காளர் உள்ளனர். பிரேசர் மலை உட்பட மூன்று வாக்குப்பதிவு மையங்கள் கொண்டுள்ளது.

பிரேசர் மலை சீனப் பள்ளியில் 40 வாக்காளர்களே உள்ள நிலையில் 2 மணியோடு அங்கு வாக்குப்பதிவு மையம் மூடப்பட்டது.

மீதம் இரண்டு மையங்களில் வாக்குப்பதிவு தொடர்கின்றது.

பிற்பகல் 2.25

கோல குபு பாரு இடைத்தேர்தல் 2 மணி வரையிலும் 44.68% மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிற்பகல் மணி 1.30

வேட்புமனுத் தாக்கல் முதல் இதுநாள் வரை 12 புகார்களை போலீஸ் பெற்றுள்ளது என்று மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

“வாக்களிக்க வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை 12 போலீஸ் புகார்கள் வந்துள்ளன.

மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் பிரதமரின் படங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ததாக மொத்தம் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று இன்று கோலகுபு பாரு வில் வாக்கு சாவடிக்கு வந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் (கேபிகேடி) ஙா கோர் மிங் 50 லட்சம் வெள்ளிக்கு மேல் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்ததற்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை விசாரிக்காது.

“அது எங்களுக்கு கீழே இல்லை. அது எம்ஏசிசியின் கீழ் உள்ளது என்றார் அவர்.

பிற்பகல் மணி 1.00

தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்று காலை 8 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச் சாவடி முன் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களும் தேர்தல் பணியாளர்களும் உதவி புரிந்தனர்.

நண்பகல் மணி 12.20

கோல குபு பாரு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இது வரையிலும் 31.51% எட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்.

காலை மணி 11.25

கேகேபி இடைத்தேரலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களும் கேகேபி வாக்காளர் இல்லை. பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல், சுயேட்சை வேட்பாளர் nyau ke xin மற்றும் பிஆர்எம் வேட்பாளர் ஹபிஸா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் மண்ணின் மைந்தர். இருப்பினும் இவர் பத்தாங் காலி வாக்காளர்.

ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் அம்பாங் வட்டாரத்தை சேர்ந்தவர். பிஆர்எம் வேட்பாளர் ஹபிஸா குவாங் மற்றும் சுயேட்சை வேட்பாளர் nyau ke xin சபா பெர்ணாம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இன்று நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் இந்த 4 வேட்பாளர்களும் இன்று வாக்களிக்கவில்லை.

காலை மணி 11.10

கோல குபு பாரு பெர்த்தாக் வாக்களிப்பு மையத்தில் இது வரையிலும் 53% வாக்களித்துள்ளனர். கடந்த மாநில தேர்தலில் அம்மையத்தில் 77% வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

காலை மணி 10.30

இது வரையிலும் 18.05% மக்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காலை மணி 10.00

கோல குபு பாரு இடைத் தேர்தலில் காலை மணி 9 மணி வரையிலும் 10% வாக்குப்பதிவு ஆகியுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காலை மணி 9.40

கோல குபு பாரு இடைத் தேர்தல் இன்று வாக்களிப்பு தொடங்கிய நிலையில் உலு யாம் லாமா சூன் சீ சீனப்பள்ளி பள்ளியில் 100க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளதாக அங்குள்ள தேர்தல் அதிகாரி தெரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles