18 கோவில்களுக்கு நிலம் வழங்கினோம்! சட்டப்பூர்வ மது பானங்கள் விற்பனை குறித்து பெரிக்கத்தான் நேஷனல் கேள்வியை எழும்பியது இல்லை!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 10-
பெரிக்கத்தான் நேஷனல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுபானங்களுக்கு தடை விதிக்கும் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாரா முற்றாக மறுத்தார்.

இந்த நாட்டில் சட்ட பூர்வமான முறையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் குறித்து நாங்கள் கேள்வியை எழுப்பியது இல்லை.

இதற்கு முன்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்திருக்கிறேன்.

கள்ள சாராயம் மற்றும் சட்டபூர்வமான முறையில் தயாரிக்கப்படும் சம்சுவை தடை செய்ய வேண்டும் என்று மட்டுமே குரல் எழுப்பி இருக்கிறோம்.

ஆனால் சட்ட பூர்வ முறையில் வைக்கப்படும் மதுபானங்களை தடை செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தது இல்லை என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூரில் 400 மதுபான கடைகள் உள்ளன. ஆனால் 1,800 கடைகளுக்கு லைசென்ஸ் இல்லை. இந்தக் கடைகளுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்தோம்.

பெரிக்கத்தான் நேஷனல் 12 மாத ஆட்சியில் 18 கோயில்களுக்கு நிலம் வழங்கினோம்.

இஸ்லாம் அல்லாதவர்கள் மீது நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம் என்பதற்கு இந்த கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ஒரு எடுத்துக்காட்டு என்றவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles