
கோலகுபு பாரு மே 12-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் வெற்றி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தெரிவித்தார்.
இம்முறை மலாய்காரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அதேசமயம் சீனர் மற்றும் இந்தியர்களின் ஆதரவு எப்போதும் போல் வலுவுடன் உள்ளது.
பூர்விக குடிமக்களும் அதிக அளவில் ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சி என்று அவர் சொன்னார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

