
காப்பார், மே 13
காப்பார் வல்லம்புரோசா தோட்ட தமிழ் பள்ளியில் பசுமை திட்டம் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டு கூட்டமும் மற்றோர் வளாகத்தில் பசுமை திட்டம் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மகேஸ்வரி இராஜகோபால் கூறுகையில் பசுமையை நேசிப்போம் என்ற கருப்பொருளோடு இந்த பள்ளிகள் இன்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறித்து பசுமைக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது என்றார்.
காப்பர் வட்டாரத்தில் இயங்கி வரும் வல்லம்பு ரோசா தோட்டத் தமிழ் பள்ளியில் 37 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.

இந்த பள்ளியில் தற்போது 407 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இதனிடையே குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் பள்ளியில் நடைபெற்ற பசுமை விழாவில் கலந்து சிறப்பித்தார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர் குயில் மாத இதழை வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார்.

